இந்தியன் படத்தில் இணைந்த கமல் - ஷங்கர் கூட்டணி தற்போது மீண்டும் இந்தியன்- 2 மற்றும் இந்தியன்-3 படங்களில் இணைந்திருக்கிறார்கள் . இதில் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வருகிற 12ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் கமல்ஹாசன் குறைவான காட்சிகள் மட்டுமே நடித்திருப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அதை மறுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
அவர் கூறுகையில், ‛‛இந்தியன்- 2 படத்தில் அதிகமான காட்சிகளில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அதோடு அவர் இல்லாத காட்சிகளிலும் மற்ற கேரக்டர்கள் அவரை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் படம் முழுக்க கமல் நடித்துள்ளார். மேலும், இந்தியன்-2 படத்திலிருந்து மூன்றாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அந்த பாகத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதியின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் கமல் என்கிறார் இயக்குனர் ஷங்கர்.