மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். நடிகர் ஜெமினி கணேசன் காலம் முதல் பாடிவரும் இவருக்கு தற்போது 80 வயது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரவி வருகிறது.
இது குறித்து பலரும் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினர் இதுகுறித்து கூறும்போது, ஜெயச்சந்திரன் தற்போது நலமாகவே இருக்கிறார். வயதானவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சில உபாதைகளுக்காக தேவைப்படும்போது சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதனால் தேவையில்லாமல் அவரது உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வதந்திகளாக பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.