மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1940களில் ஏராளமான பாடகிகள் திரைப்பட நடிகை ஆனார்கள். பாடும் திறனோடு அழகான தோற்றமும் இருந்தால் சினிமா வாய்ப்பு உறுதி என்பது அப்போதிருந்த நிலை. அப்படி அந்த காலத்தில் பாடி நடித்துக் கொண்டிருந்தவர் பி.ஏ.ராஜாமணி. அக்காவிற்கு துணையாக கச்சேரிக்கும், சினிமா படப்பிடிப்புக்கும் சென்றவர் பி.ஏ.பெரிய நாயகி. கடலூர், பண்ருட்டி வட்டத்தில் உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர். பெரிய நாயகியின் தாயார் ஆதிலட்சுமி, 'பண்ருட்டி அம்மாள்' என்ற பெயருடன் கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார்.
1940ல் வெளியான 'விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்' என்ற படத்தில் பெரியநாயகியின் அக்கா பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. பின்னர் லேனா செட்டியார் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய 'பிரபாவதி' படத்திலும் இணைந்து சிறு வேடங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டு, டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த 'ஸ்ரீவள்ளி' படத்தை தயாரித்தார் மெய்யப்ப செட்டியார். படம் முடிந்து முதல் பிரதியைத் திரையிட்டுப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். டி.ஆர்.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக குமாரி ருக்மணி பாடியிருந்த பாடல்கள் அமையவில்லை. படப்பெட்டிகள் அனைத்தும் தயாராகி, பிரதிகள் பல ஊர்களுக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் திரும்ப அனுப்ப சொல்லி தகவல் அனுப்பினார்.
அப்போதுதான் மும்பையில் 'போஸ்ட் சிங்க்ரனைசேஷன்' முறையில் பின்னணி பாடும் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இதை கொண்டு வந்த செட்டியார் படத்தில் ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும், பெரிய நாயகியை பாடவைத்து அதையே படத்தில் பின்னணி பாடலாக இணைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றது, பாடல்களும் பிரபலமானது. பி.ஏ.பெரிய நாயகி முதல் பின்னணி பாடகி ஆனார்.
அதன்பிறகு கீதகாந்தி, பஞ்சாமிர்தம், என் மனைவி, மனோன்மணி, மகாமாயா, பிரபாவதி, கிருஷ்ண பக்தி, தர்மவீரன், ஏகம்பவாணன், ருக்மாங்கதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.