போலீஸ் ஸ்டேஷக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா |
வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் யுவினா. தமன்னா அண்ணன் மகளாக, குழந்தை நட்சத்திரமாக நடித்தார். யுவினா சுட்டித்தனமும், போறப்போக்கை பார்தால் எனக்கே உங்களை பிடிச்சிடும் போலிருக்கே என வசனம் பிரபலம் ஆனது. மாஸ் படத்திலும் சூர்யா மகளாக நடித்தார்.
அரண்மனை, கத்தி உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது ரைட் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் நடிப்பு அழுத்தமாக இருக்கும். அவர் நடிப்பை பார்த்தால் அழுகை வந்துவிடும் என்று படத்தில் நடித்த நட்டியும் கூறியுள்ளார். சுப்ரமணியன் ரமேஷ் குமார் படத்தை இயக்கியுள்ளார். ஒரு போலீஸ் ஸ்டேஷனை அடையாளம் தெரியாதவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர என்ன நடக்கிறது என்பது கதை.
‛‛நான் அஜித்துடன் நடித்த படம் வீரம். அதில் இருந்து பிரபலம் ஆனேன். ரஜினி சாருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா பிற்காலத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நான் அஜித்துடன் அப்படி நடிக்க வாய்ப்பில்லை. இப்போது காலம் மாறிவிட்டது'' என்றார்.