பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
முன்னணி மலையாள நடிகர் கே.ஆர்.ஜெயச்சந்திரன் மீது சமீபத்தில் மிக கொடுமையான பாலியல் புகார் அளிக்கப்பட்டது. தனது உறவுக்காரின் 4 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கசாபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது, இதையடுத்து ஜெயச்சந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது.
ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதனை விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.