தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் கடந்த 7 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் இப்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளதோடு மேலும் 3 மாதத்திற்குள் புகார்தாரருக்கு 3 லட்சத்து 72 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இழப்பீடை செலுத்த தவறினால் ராம்கோபால் வர்மா மேலும் 3 மாதங்களுக்கு ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பின்போது ராம்கோபால் வர்மா கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது வாரண்ட் பிறப்பித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா அவரது எக்ஸ் பக்கத்தில், “இது 7 ஆண்டுகள் பழமையான 2 லட்சத்து 38 ஆயிரம் தொடர்பான வழக்கு. எனது முன்னாள் ஊழியர் தொடர்புடையது. இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து மேலும் எதுவும் என்னால் கூற முடியாது”என கூறியுள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து ராம்கோபால் வர்மா மேல்முறையீடு செய்யாவிட்டால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று தெரிகிறது.