‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அதையே சற்று வித்தியாசமான கோணத்தில் காட்டும் விதமாக உருவாகி வரும் படம் ஜமா. பாரி இளவழகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்தின் கதையை கேட்டதும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு சினிமா பாடல்களுக்காக பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி சினிமாத்தனமான பாடல்களையும் இசையையும் கொடுக்க இளையராஜா விரும்பவில்லை. அதற்கு பதிலாக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை தனது இசைக்கூடத்திற்கு வரவழைத்து அவர்கள் போக்கிலேயே பாடல்களை பாட விட்டும், அவர்களது இசைக்கருவிகளை இசைக்க விட்டும் அதை எல்லாம் ஒலிப்பதிவு செய்து இந்த படத்தில் அழகாக இசை கோர்ப்பு செய்துள்ளாராம் இளையராஜா.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகும் படம் இது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.