‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி | சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' 2ம் பாகம்: ஆர்யா தயாரிக்கிறார் | விடாமுயற்சி - முதல் 'லுக்'கை சமாளிக்க இரண்டு இரண்டாவது 'லுக்' ரிலீஸ் |
நடிகர் பஹத் பாசில் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆவேசம். இந்த படத்தில் ரங்கா என்கிற ரவுடி கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் வித்தியாசமான நடிப்பிலும் ரசிகர்களை வர்ந்தார் பஹத் பாசில். அந்த படத்தில் அவர் பேசும் வசனங்கள் மட்டுமல்லாது படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி மற்றும் கரிங்காலியல்லோ என்கிற இரண்டு பாடல்களும் மலையாள ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பாடல்களுக்கு தான் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கார்லெஸ் அல்கராஸ் என்பவர் விளையாடிய போது முதல் சுற்றில் அதிக புள்ளிகள் கணக்கில் தனது எதிரியை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் கார்லெஸ் அல்கராஸ் ஆவேசமாக விளையாடும் காட்சிகளை தொகுத்து அதன் பின்னணியில் ஆவேசம் படத்தில் இடம்பெற்ற இலுமினாட்டி பாடலை இடம்பெறச் செய்துள்ளனர். இந்த வீடியோவை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை விநாயக் சசிகுமார் எழுத இசையமைப்பாளர் சுசின் சியாம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.