இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த 2021ம் வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது. கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு மிக மெதுவாக நடந்து வருகிறது.
இப்படத்தின் தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதமே அறிவித்தார்கள். அதனால், கடந்த ஆண்டே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பட வெளியீடு எப்போது என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர், “படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. 'இந்தியன் 2' படம் வெளியான பின் அந்த வேலைகளை முடித்துவிடுவேன். அதன் பின் 'கேம் சேஞ்சர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இறங்கி படத்தின் மொத்த காட்சிகள் பற்றி முடிவெடுப்பேன். அவை முடிந்த பின் பட வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகும். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.