நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
ஹிந்தி இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த ஹிந்திப் படமான 'கர்ணா' படம் டிராப் செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாலிவுட்டில் தகவல் பரவியது.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இப்படத்தில் திரவுபதியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
படத்தில் எண்ணற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் முதலில் போட்ட பட்ஜெட்டை விட தற்போது பட்ஜெட் எகிறிவிட்டதாம். சுமார் 500 கோடிக்கும் செலவாகும் என தெரிய வந்ததால் படத்தை டிராப் செய்ததற்காகக் காரணமாகச் சொன்னார்கள்.
ஆனால், படத்தை டிராப் செய்யவில்லை, தற்போதைக்குத் தள்ளி வைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் படத்தை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்திப் படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உயர வேண்டுமென்றுதான் சென்னையை விட்டு மும்பை சென்று சூர்யா செட்டில் ஆனார்.