லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2024ம் ஆண்டில் அடுத்து வர உள்ள மாதங்களில் சில டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்', கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2', விஜய் நடித்துள்ள 'தி கோட்', அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ஆகிய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக உள்ளன.
கமல்ஹாசன் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் இன்று வெளியாகியது. அதோடு சில தினங்களுக்கு முன்பு 'இந்தியன் 2' டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டார் லோகேஷ்.
விஜய் நடித்துள்ள 'தி கோட்' படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் விஜய் பிறந்தநாள் வீடியோ ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்குப் போட்டியாக அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் சில மேக்கிங் வீடியோக்களை புதிதாக வெளியிட்டனர். இன்று மாலை அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
இப்படி மாறி, மாறி ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் அப்டேட், சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் அப்டேட் கேட்டு அதன் தயாரிப்பாளரை தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.