டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்தவர் வெங்கல் ராவ். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தனது கை கால்கள் செயலிழந்து விட்டதாகவும், வீட்டிலேயே முடங்கி விட்டதாகவும் கூறியவர், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி தெரியாமல் இருப்பதாக தனது நிலையை தெரிவித்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து நடிகர் சிம்பு அவருக்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் கே.பி.ஒய்.பாலாவும் வெங்கல் ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெங்கல் ராவ் அண்ணாவுக்கு என்னால் முடிந்த தொகையை மருத்துவ செலவுக்கு அளித்திருக்கிறேன். அதனால் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு அளிக்க வேண்டும். அவர் மீண்டும் திரும்பி வந்து சினிமாவில் நடித்து நம்மையெல்லாம் சிரிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கே.பி.ஒய். பாலா.
ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி
சிம்பு, கேபிஒய் பாலாவை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் வெங்கல் ராவ்விற்கு உதவி செய்துள்ளார். தன் பங்கிற்கு அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளார்.




