டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
கோலங்கள் என்கிற மாபெரும் ஹிட் தொடரை கொடுத்த திருசெல்வம் சில ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். கோலங்களை விடவும் எதிர்நீச்சல் தொடரின் கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. எனவே, அந்த சீரியலுக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டி ஒளிபரப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால், இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி அந்த தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்தாலும் சீரியல் பழைய வேகத்தை பெற முடியாமல் டிஆர்பியில் திணறி தற்போது முடிவுக்கே வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் பட்டம்மாள் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் அண்மையில் அளித்த பேட்டியில், 'எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து சொதப்பியதால் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை வேறொரு டைம் ஸ்லாட்டிற்கு மாற்ற சொல்லி மெயில் அனுப்பினார்கள். அதனால் தான் இயக்குநர் சீரியலை ஒரேடியாக முடித்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.