பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலு உடன் இணைந்து 30 படங்களில் காமெடியில் அசத்தி உள்ளார். அதிலும் இவர்களது கூட்டணியில் வந்த தலைநகரம், எலி போன்ற படங்களின் காமெடி ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதிலும் வெங்கல் ராவ்வின் தலையில் கை வைத்து மாட்டிக் கொண்டு வடிவேலு படும் அவஸ்ததை காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
கடந்த 2022ல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார் வெங்கல் ராவ். சினிமாவிலும் வாய்ப்பு இன்றி போக இப்போது அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். உடல்நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதில் அவருக்கு கை, கால்கள் வரவில்லை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
‛‛அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கல் ராவ் பேசுறேன். எனக்கு கை, கால்கள் விழுந்திடுச்சு. என்னால் நடக்கவும் முடியல, சரியாக பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை. மருந்து வாங்க கூட காசு இல்லை. நடிகர்கள், சினிமா சங்கங்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்க. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை'' என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.