டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, மோகன்லால், பிரபாஸ், ப்ரீத்தி முகுந்தன், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கண்ணப்பா'. சரித்திர காலப் படமாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரம்மாண்டமான உருவாக்கம், சண்டைக் காட்சிகள் என அசத்தலாக இருந்தது டீசர். அதில் ஒரு பெண் சண்டை போடும் காட்சிகள் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ரசிகர்கள் மட்டுமல்ல தெலுங்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யார் இவர் எனக் கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
கவின் நடித்து கடந்த மாதம் வெளியான 'ஸ்டார்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ப்ரீத்தி முகுந்தன் தான் அந்தப் பெண். 'கண்ணப்பா' படம் வெளியாவதற்கு முன்பே அவரைத்தேடி சில தெலுங்குப் பட வாய்ப்புகள் போகும் என டோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.




