டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படமாக 'வா வாத்தியார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதில் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆக கார்த்தி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ஆன பேண்டஸி விஷயங்கள் உள்ளது என்கிறார்கள்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு விரைந்து பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.




