இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அதிநவீன கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட உள்ளன. கட்டிட பணிகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான, மற்றும் சங்கத்தின் இடம் தொடர்பான வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு வங்கியில் கடன் பெற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கட்டிட நிதியாக கமல்ஹாசன், விஜய், தனுஷ், நெப்போலியன், உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கி உள்ளனர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கினார். நடிகர் சங்க கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டபோது போடப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட இப்போது பல மடங்கு செலவினங்கள் பெருகி விட்டதால் வெறும் வங்கி கடன், நன்கொடைகளை வைத்து மட்டும் கட்டித்தை முடிக்க முடியாது என்பதால் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் பிறகு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் நடத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், ரஜினியை நேற்று நேரில் சந்தித்து நடிகர் சங்க செயல்பாடுகள் மற்றும் கட்டிட பணிகள் குறித்து பேசினார். அதோடு நட்சத்திர கலை விழா குறித்த ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் பேசினார். நடிகர் சங்கத்தின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ரஜினியும் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.