ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்திய சினிமாவின் இளம் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள மொழி அனைத்திலும் பாடி உள்ள ஸ்ரேயா ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது ஒரே பாடலை 6 மொழிகளில் அவரே பாடி உள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சூசெகி' என்ற பாடலை, 'அன்காரூன்' என ஹிந்தியிலும், 'சூடான' என தமிழிலும், 'கண்டாலோ' என்று மலையாளத்திலும், 'நொடோகா' என கன்னடத்திலும் 'ஆகுன்னர்' என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.