நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், தள்ளிபோகாதே, காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் 'காந்தாரி'. இந்த படத்தில் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக காந்தாரி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். இது ஒரு பேண்டசி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. பழங்கால பொருட்களை ஆராச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் கேரக்டரிலும் ஹன்சிகா நடிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எதிரிகளால் கொல்லப்பட்ட பெண் காந்தாரி பற்றி ஹன்சிகா ஆய்வு செய்யும்போது காந்தாரி உயிர்த்தெழுந்து ஹன்சிகா மூலம் எதிரிகளை பழிவாங்குவது மாதிரியான கதை. இதில் ஹன்சிகா ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணனே தயாரிக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார் படத்தின் கதையை தனஞ்செயன் எழுதி உள்ளார். தற்போது ஹன்சிகாவின் காந்தாரி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆளே அடையாளம் தெரியாத ஹன்சிகாவின் காந்தாரி தோற்றம் வைரலாகி வருகிறது.