‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் |

தனுஷை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திய படம் 'புதுப்பேட்டை'. செல்வராகவன் இயக்கி இந்த படம்தான் சென்னை தாதாக்கள் பற்றிய முதல் முழுமையான படம். இதில் தனுஷ் உடன் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தனுஷ் நடித்த 'கொக்கி குமார்' கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் “கொக்கி குமார் கதாபாத்திரத்துக்கு 18 வருடங்கள். ஒரு நடிகரின் சினிமா வாழ்க்கை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும் அழுத்தமானதாக அமைந்துவிடும். அதுபோன்ற கதாபாத்திரம்தான் கொக்கி குமார். இந்த கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. கொக்கி குமார் கதாபாத்திரம் ஒரு எமோஷன்'' என்று குறிப்பிட்டு உள்ளார். 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.