விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
'ஜெயிலர், வேட்டையன்' என அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் தற்போது நடித்து வரும் 'வேட்டையன்' படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்து ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ரஜினிகாந்த்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. 'வேட்டையன்' படப்பிடிப்பில் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அவர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே படப்பிடிப்பை வேகமாக நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னும் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'கூலி' படப்பிடிப்பிற்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடு செல்வாரா அல்லது இங்கேயே பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.