நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர். கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது.
நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள். ஒருவரது அறிவிப்பில் மற்றவர் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. மற்றபடி அந்த அறிவிப்பில் இருந்த வாக்கியங்கள் ஒன்றே.
ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிவிப்பில் கமெண்ட் பிரிவை ஆப் செய்துவிட்டிருந்தார். அதனால், அதில் யாரும் கமெண்ட் செய்ய முடியவில்லை. அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக யார் பிரிந்தாலும் பிரிவதற்கு முன்பாகவே இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், இருவருமே, இதுவரையிலும் அப்படி எதையும் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளத்தில் சைந்தவி தன்னுடைய பெயரில் இருக்கும் பிரகாஷ் என்பதையும் நீக்கவில்லை.
இருவரது பிரிவும் தற்காலிகமாக இருக்கட்டும். விரைவில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.