லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காதல் திருமணங்கள் ஆச்சரியத்தையும், திருமணப் பிரிவுகள் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. சமீப காலத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது ஒரு 'இசை ஜோடி'யின் பிரிவு.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி, பாடகி சைந்தவி ஆகியோரது பிரிவு அறிவிப்பு வந்த போது பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பள்ளியில் படித்த காலத்திலிருந்து காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள்.
தனது சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாவில் மட்டுமே ஆக்டிவ்வாக இருப்பவர் சைந்தவி. அதில்தான் தொடர்ந்து அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார். தனது கணவர் ஜிவி பிரகாஷ் உடனான பிரிவுக்கு முன்பாக 'சைந்தவி பிரகாஷ்' என்று இருந்ததை, தற்போது 'சைந்தவி' என்று மட்டும் வைத்து கணவரது பெயரை நீக்கியுள்ளார்.
இருந்தாலும் தனது முன்னாள் கணவர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜிவியின் தங்கை நடிகை பவானிஸ்ரீ ஆகியோரை இன்னமும் பாலோ செய்து வருகிறார்.