2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோர் இணைய சூர்யாவின் 43வது படமாக 'புறநானூறு' படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் நஸ்ரியா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் நடிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சூர்யா, சுதா இருவரும் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் “விரைவில் அடுத்த கட்ட பணிகளும், படப்பிடிப்பும் தொடங்கும்,” என்றார்கள்.
ஆனால், படம் கைவிடப்பட்டது என்பதுதான் கோலிவுட்டின் தகவல். கடந்த சில வாரங்களாக சூர்யாவுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன.
'புறநானூறு' படத்திற்காக சுதா சொன்ன கதையின் இறுதி வடிவம் சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால்தான் படம் கைவிடப்பட்டது என அறிவிக்காமல் மழுப்பலாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள் என்றும் சொன்னார்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்றும் செய்திகள் வந்தன. இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சர்பிரா' படத்தின் சிறப்புக் காட்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குனர் சுதா, நாயகன் அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தக் காட்சிக்கு சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். சூர்யா, சுதா நட்பில் உரசல், பிரிவு என்று வந்த செய்திகளை நேற்றைய நிகழ்வு பொய்யாக்கியுள்ளது. இருப்பினும் 'புறநானூறு' படத்தில் சூர்யா மீண்டும் நடிப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.