பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். கதாநாயகனாக நடித்துக் கொண்டே இசையமைக்கும் வேலைகளையும் சிறப்பாகச் செய்து வருகிறார். அவரது இசையமைப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடி வசூல் படமாகவும், ‛லக்கி பாஸ்கர்' ரூ.100 கோடி வசூல் படமாகவும் அமைந்துள்ளது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் டிசம்பர் 7ம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. 'செலிபிரேஷன் ஆப் லைப்' என தலைப்பு வைத்துள்ள அந்நிகழ்ச்சியில் ஜிவியின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாட உள்ளார். அது பற்றிய வீடியோ அறிவிப்பு ஒன்றையும் சைந்தவி வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பற்றி குறிப்பிடும் போது, 'ஜிவி பிரகாஷ் சார்', என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலித்து கல்யாணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தை பெற்ற பின்பு இருவரும் பிரிவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் பிரிவுக்குப் பின்னும் இருவரும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் அளவிற்கு புரிதலுடன் இருப்பது அவர்களுடைய பக்குவத்தைக் காட்டுவதாக உள்ளது. இது பற்றி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள். ஜிவியின் இசையில் சினிமாவிலும் சைந்தவி தொடர்ந்து பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷின் தாய் மாமாவான ஏஆர் ரஹ்மான் - சாய்ரா இருவரும் பிரிவதாக இரண்டு தினங்களுக்கு முன்புதான் அறிவிப்பு வெளியிட்டனர்.