அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவரது இசையமைப்பில் தற்போது தங்கலான், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
ஜிவி பிரகாஷ், சைந்தவி என்பவரை காதலித்து கரம் பிடித்திருந்தார். இவர் பாடகராகவும் உள்ளார். கடந்த 10 வருடங்களாக மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரின் குடும்பத்தார்களுக்கு இடையேயான பிரச்னையே இவர்களது பிரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருவரின் பெற்றோர் வழியாக ஏற்பட்ட மனக்கசப்பினால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம். விரைவில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில், மற்றுமொரு நட்சத்திர ஜோடி பிரியும் செய்தியால் கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.