தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் | இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிதம்பரம் என்பவர் இயக்கிய இந்த படம் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் ஒரு இளைஞர் கூட்டத்தையும் எதிர்பாராத விதமாக குணா குகையை பார்க்க சென்ற போது அங்குள்ள குகைக்குள் தவறி விழும் ஒரு நண்பரை காப்பாற்ற மற்றவர்கள் நடத்தும் போராட்டமும் தான் கதைக்களமாக இடம்பெற்று இருந்தது. குகைக்குள் தவறி விழும் இளைஞராக நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடித்திருந்தார். அவரை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சவ்பின் சாஹிர் நடித்திருந்தார்.
ஸ்ரீநாத் பாஷி பள்ளத்திற்குள் எதிர்பாராமல் விழும் காட்சியும் அதைத்தொடர்ந்து அந்த குகைக்குள் ஸ்டெப் பை ஸ்டெப்பாக மோதி மோதி விழும் காட்சியும் ரசிகர்களை உறைய வைத்தன. அது மட்டுமல்ல இறுதியாக ஒரு பாறையில் அவர் மயக்க நிலையில், நழுவி விழும் ஒரு பொசிசனில் ரத்தமும் சகதியுமாக கிடப்பதை காட்டும்போதெல்லாம் அவருடைய கோலத்தைக் கண்டு படம் பார்ப்பவர்கள் நெஞ்சம் பதைத்தது.
இந்த நிலையில் ஸ்ரீநாத் பாஷியின் இந்த தோற்றத்திற்கான மேக்கப்பிற்கு சகதிக்கு பதிலாக ஓரியோ பிஸ்கட்டுகள் பயன்படுத்தப்பட்டு மேக்கப் செய்யப்பட்டது என்று ஒரு புதிய தகவலை தற்போது கூறியுள்ளார் இயக்குனர் சிதம்பரம். மேக்கப்பில் இப்படி ஒரு புதிய முறையை நாங்கள் புகுத்தினாலும் அந்த காட்சிகளை படமாக்கும்போது சில நேரங்களில் அந்த பிஸ்கட்டால் ஈர்க்கப்பட்ட எறும்புகள் ஸ்ரீநாத் பாஷியின் உடலில் மொய்த்து கடித்ததையும் தாங்கிக் கொண்டு அவர் அந்த காட்சியில் நடித்தார் என்று கூறியுள்ளார்.