வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நவ., 18ல் வெளியாகி உள்ளது.
தனுஷ் மீது பாய்ச்சல்
இது வெளியாகும் சில தினங்களுக்கு முன், ‛‛இந்த ஆவணப்படம் இரு ஆண்டுகளாக வெளியாக இருக்க காரணமே தனுஷ் தான். நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளரான அவர், அதில் வரும் காட்சிகளை பயன்படுத்த என்ஓசி தரவில்லை. மேலும் டிரைலரில் மூன்று விநாடி காட்சி பயன்படுத்த 10 கோடி கேட்டார்'' என தனுஷ் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை கடுமையாகவும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா.
எடுபடாத பப்ளிசிட்டி
இந்த விஷயம் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர் அமைதியாக தனது வேலையை பார்த்து வருகிறார். அதேசமயம் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நயன்தாரா இவ்வளவு தூரம் தனுஷை பற்றி கடுமையாக விமர்சித்து தனது ஆவணப்படத்திற்கு பப்ளிசிட்டி தந்தும் ரசிகர்களிடம் அது எடுபடவில்லை.
தனுஷை தவிர்த்து நன்றி
இந்நிலையில் தனது ஆவணப்படத்திற்கு என்ஓசி தந்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதில் ‛‛பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் முக்கியமானது. அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என குறிப்பிட்டு, பாலிவுட்டில் ஷாரூக்கான், தமிழில் கவிதாலயா - கே பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, லைகா - சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் - உதயநிதி, ஏஜிஎஸ் - கல்பாத்தி அகோரம், வேல்ஸ் பிலிம்ஸ் - ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதேப்போல் தெலுங்கில் சிரஞ்சீவி, சிவபிரசாத் ரெட்டி, மலையாளத்தில் என்பி விந்தயன், மஹா சுபீர் உள்ளிட்ட பலரின் பெயரை பட்டியலிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் தனுஷ் பெயரை குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படம் தொடர்பான 20 விநாடி காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். ஆவணப்படத்தில் ஓரிரு விநாடிகள் வந்த காட்சிகளுக்கு எல்லாம் அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா, தனுஷ் மீதுள்ள வெறுப்பால் அவருக்கு மட்டும் நன்றி தெரிவிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் நயன்தாராவை வசை பாடி வருகின்றனர்.