2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ் இயக்கம், நடிப்பில் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படம் 'ராயன்'. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளார்கள். படத்தில் நிறைய வன்முறைக் காட்சிகள் உள்ளதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வட சென்னை' படம்தான் 'ஏ' சான்றிதழ் பெற்று வெளியானது. அதற்குப் பிறகு இப்போது 'ராயன்' படம் அந்த சான்றுடன் வெளியாக உள்ளது.
படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு மறு தணிக்கைக்கு விண்ணப்பிக்க தனுஷ் ஆலோசனை சொன்னாராம். ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பரவாயில்லை, தியேட்டர்களில் அப்படியே வெளியாகட்டும். டிவியில் ஒளிபரப்பாகும் போது வேண்டுமானால் மறு தணிக்கை செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.