டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் 'தேவரா'. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோ நடிக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ரிலீஸுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள டில்லு ஸ்கொயர் படத்தின் சக்சஸ் மீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஜூனியர் என்டிஆர். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, தேவரா படம் குறித்து ஒரு தகவலையும் வெளியிட்டார்.
அங்கிருக்கும் ரசிகர்களை பார்த்து, “தேவரா திரைப்படம் வெளியாக சில நாட்கள் கால தாமதம் ஆனாலும் கூட, அந்த படம் வெளியாகும்போது என் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் விதமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு எல்லா விஷயத்திலும் கடின உழைப்பை கொடுத்து வருகிறோம்” என்று கூற அரங்கில் அமர்ந்த ரசிகர்களின் கைதட்டல் அடங்க இரண்டு நிமிடமானது.




