ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். சமீப காலமாக பட தயாரிப்பாளராகவும் மாறி வெற்றிகரமாக படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல தெலுங்கிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஜெய் கணேஷ் திரைப்படம் வரும் ஏப்-11ம் தேதி வெளியாக இருக்கிறது. ரஞ்சித் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் உன்னி முகுந்தனும் மகிமாவும் பம்பரமாக சுழன்று கலந்து கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உன்னி முகுந்தன் போலியோ மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கியுள்ளார். ஜெய் கணேஷ் படத்தில் நடிகர் உன்னி முகுந்தனும் இதேபோன்று நடக்க முடியாமல் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் சக்கர நாற்காலியில் பயணிப்பவராகவே நடித்துள்ளார். அதனால் மாற்றுத்திறனாளிகளின் தேவையை தன்னால் உணர முடிந்தது என்றும் தன்னால் முடிந்த சிறிய உதவி இது என்றும் கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.




