எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான உன்னி முகுந்தன் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாளிகைப்புரம், மேப்படியான் என ஹிட் படங்களை கொடுத்து நல்ல வசூலையும் அள்ளினார். இந்த நிலையில் அவர் நடித்துள்ள ஜெய் கணேஷ் என்கிற படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள சினிமாவின் பீல் குட் படங்களை இயக்கிய வரும் ரஞ்சித் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
இதற்கு முன்பாக 7 வருடங்களுக்கு முன் வெளியான மாஸ்டர் பீஸ் என்கிற படத்தில் உன்னி முகுந்தனும், மகிமா நம்பியாரும் இணைந்து நடித்துள்ளனர். அதே சமயம் கடந்த ஏழு வருடங்களாக மகிமா நம்பியாரின் போன் நம்பரை உன்னி முகுந்தன் பிளாக் செய்து வைத்திருந்தார் என்கிற தகவல் மகிமா மூலமாகவே தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது மகிமாவிற்கு நாய் வளர்ப்பதில் ரொம்பவே ஆர்வம்.. அதேபோல உன்னி முகுந்தனும் விதவிதமான நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் இருந்து புதிய ரக நாய்க்குட்டிகளை வாங்கலாம் என மாஸ்டர் பீஸ் படத்தின் கதாசிரியர் உதய கிருஷ்ணா மகிமாவிடம் கூறி உன்னி முகுந்தனின் மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார். மாஸ்டர் பீஸ் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சீரியஸாக உன்னி முகுந்தன் காணப்படுவதால் அவரிடம் மகிமா அவ்வளவாக பேசியது இல்லை.
அதனால் வாட்ஸ் அப்பில் இந்த நாய்க்குட்டி விவகாரம் குறித்து உன்னி முகுந்தனுக்கு மெசேஜ் அனுப்பிய மகிமா அதில் கதாசிரியர் உதயகிருஷ்ணா குறித்து குறிப்பிடும்போது பலமுறை உதயன் உதயன் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு சீனியரை இப்படியா பெயர் சொல்லி அழைப்பது, சரியான அகங்காரம் பிடித்தவராக இருக்கிறாரே என்று மகிமாவின் எண்ணை பிளாக் செய்து விட்டாராம் உன்னி முகுந்தன்.
அதன்பிறகு இந்த ஜெய் கணேஷ் படத்திற்காக இயக்குனர் ரஞ்சித் சங்கர், மகிமாவை நடிக்க வைக்கலாம் என்று கூறியபோது தான் அவரை பிளாக் செய்து வைத்திருந்த ஞாபகமே உன்னி முகுந்தனுக்கு வந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு உன்னி முகுந்தன் இணை தயாரிப்பாளர் என்பதால் மகிமாவுடன் பேச வேண்டும் என்பதற்காக அப்போதுதான் அவரது என்னை அன் பிளாக் செய்தாராம் உன்னி முகுந்தன்.