‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.
இது தவிர நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். 2011ல் வெளியான 'உருமி' படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவாவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக கத்தனார் படக்குழு வெளியிட்டுள்ளது. உருமி படத்திலும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு இந்த ரீ என்ட்ரியிலும் கூட மீண்டும் அதேபோன்று இன்னொரு வரலாற்று கதாபாத்திரம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.