மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு மார்ச் 18ம் தேதி வந்தது. அடுத்த பத்து நாட்களில் மார்ச் 28ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்க வேண்டிய 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாகி பின் கைவிடப்பட்டது. அதற்கடுத்து ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தின் அறிவிப்பு வெளியாகி அதுவும் டிராப் ஆனது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வணங்கான்' படப்பிடிப்பு ஆரம்பமாகி நின்று போனது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல், புறநானூறு' தள்ளிப் போக உள்ள நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள படம்தான் அடுத்து ஆரம்பமாக உள்ளது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே சூர்யா நடிக்கும் படங்களில் எதற்காக இப்படி ஒரு குழப்பம் என அவரது ரசிகர்களே நொந்து போய் உள்ளார்கள்.