குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சினேகா குப்தா, தென்னிந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு ஆடி வருகிறார். ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள சினேகா தற்போது விமல் நடித்து வரும் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருடன் ஆடி உள்ளார்.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார் பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர். ரவி மரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி புகழ், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசை அமைக்கிறார். செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். எழில் இயக்குகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் முதல் இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில், இடம் பெறும் "டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு.." என்கிற பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 50 லட்சம் செலவில் கலை இயக்குனர் சிவசங்கர் பங்களா செட் ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளார். நடன இயக்குனர் தினேஷ் நடன வடிவமைப்பில் உருவாகி வரும் இந்த பாடலில் விமல் மற்றும் சினேகா குப்தா இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். விமல் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது.