சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், வைசாக் பாபுராஜ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது “ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. பேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்த படத்தை இப்போது முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” என்றார்.