ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடைசி தோட்டா'. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ராதாரவி கதை கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார், மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் குமார் கூறியதாவது : ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் ஜானரில் படம் தயாராகி உள்ளது. இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷனராகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்டைலிஷாக நடித்திருக்கும் ராதாரவியை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் பார்க்கலாம். அதேப்போல் வனிதா விஜயகுமாரின் அதிரடியான போலீஸ் வேடமும், அவரது நடிப்பும் நிச்சயம் பேசப்படும். கொடைக்கானல், புதுச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.