அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சென்னனை : நடிகர் சங்கத்தை போலவே டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ராதாரவி ஆளாகியுள்ளார். புகார் குறித்து தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையை தொடர்ந்து ராதாரவி மீது வழக்கு பாய உள்ளது.
டப்பிங் கலைஞர்கள் சங்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு பதவிகளை வகித்தவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க பொறுப்பிலும் இருந்த இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அதேபோல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும், பல கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்படுகிறது.
வரவு, செலவு கணக்கு கேட்பவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது, சம்பளத்தை கலைஞர்கள் யாரும் நேரடியாக பெறாமல், தான் நியமிக்கும் கமிஷன் தரகர்கள் மூலம் பெறுவது என பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், மூத்த உறுப்பினர்களான மயிலை எஸ்.குமார், சிஜி, மறைந்த காளிதாஸ் ஆகியோரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‛ராதாரவி மீதான நிர்வாகத்தின் மீது வந்துள்ள புகார் அனைத்தையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டார்.
47 பக்கம் கொண்ட விசாரணை முடிவு அறிக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி தொழிலாளர் நலத்துறை சமர்பித்தது. அதில், கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சங்கத்திற்காக நிலம் வாங்கியதில், 50 லட்ச ரூபாய்க்கு மேல் பொய் கணக்கு; 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்கள் சமர்பித்து மோசடி; உறுப்பினர்களின் சம்பளத்தில் மோசடி, கட்டாய கமிஷன்; சந்தாவில் மோசடி; கணக்கறிக்கை சமர்பிக்காமல் பொய் கணக்கு; கேள்வி கேட்கும் உறுப்பினர்களை நீக்கம் செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து, டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர தொழிலாளர் நலத்துறை மனுதாரர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. ராதாரவி மீதான இந்த நடவடிக்கையால் பெப்சி உள்ளிட்ட மற்ற திரைத்துறை அமைப்புகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் பா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் ராதாரவியை, அக்கட்சி நிர்வாகம் நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாதித்தவர்கள் கூறுகின்றனர்.