வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
'லோக்கல் சரக்கு' படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து, தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராதாரவி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் தயாரிப்பு தரப்பு விழா ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது: 'கடைசி தோட்டா' ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குனர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான்தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம்தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்து கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம்தான். என்னை அழைத்த போது, நானும் எதாவது காரணத்தை சொல்லி நிராகரித்திருக்கலாம். ஆனால், அது நல்லதல்ல. இவ்வளவு பெரிய ஏற்பாட்டை ஒருவர் நம்மை நம்பி செய்யும்போது, நம்மால் முடிந்த உதவியை அவருக்கு செய்ய வேண்டும், என்று தான் இதில் பங்கேற்றேன்.
சினிமாவில் எனக்கு 50வது ஆண்டு; நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியதுதான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன். என்றார்.
திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அடிக்கடி தாவி வந்த ராதாரவி கடைசியாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.