கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! |

போக்கஸ் ஸ்டூடியோ சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்கும் படம் 'வல்லவன் வகுத்தடா'. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார், நல்லமுத்து சேவியர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விநாயக் துரை கூறும்போது “5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், கிரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது.
பணம் தான் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை பரபர திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.




