காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
‛கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும்' என பல படங்களில் நடித்த அஞ்சலி தற்போது நிவின் பாலி நடிப்பில் ராம் இயக்கி உள்ள ‛ஏழு கடல் ஏழு மலை' மற்றும் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛கேம்சேஞ்சர்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏழு கடல் ஏழுமலை படம் தனக்கு தமிழில் மீண்டும் ஒரு பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் அஞ்சலி.
இந்த நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. என்றாலும் இந்த செய்தி உண்மையா? இல்லை வழக்கம்போல் அஞ்சலி குறித்து வெளியாகும் வதந்திகளில் இதுவும் ஒன்றா? என்பது விரைவில் தெரியவரும்.