லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சித் தலைவர்கள் சிலைகளை மூடி வைக்கவும், பேனர்கள், சுவரொட்டிகளை உள்ளிட்டவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு எண்ணூர் விரைவு சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. அப்போது இந்தியன் தாத்தாவை அங்குள்ள மக்கள் கொண்டாடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக அவர்கள் தங்கள் அடுக்குமாடியின் சுவர்களில் இந்தியன் தாத்தாவின் படத்தை பெரிய அளவில் வரைந்து வைத்திருப்பதாக காட்சிகள் படமானது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் அந்த ஓவியங்கள் அப்படியே இருக்கிறது. அங்குள்ள மக்களும் அது தங்கள் குடியிருப்புக்கு தனி அடையாளம் தருவதால் அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஓவியங்களை அரசியல் ரீதியாக எடுத்துக் கொள்வதா அல்லது சினிமாவாக எடுத்துக் கொள்வதாக என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறதாம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்களாம்.
சுவர்களில் வரையப்பட்டிருப்பது கமல்ஹாசனின் நேரடி உருவம் அல்ல. அவர் நடிக்கும் கேரக்டரின் உருவம்தான் அதனால் அதை அழிக்க வேண்டிய அவசியம் வராது என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்தியன் தாத்தா தேர்தல் அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளார்.