தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் |
தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். இதில் தியா அம்மா, அப்பாவைப் போன்று மருத்துவராக மருத்துவம் படித்து வருகிறார்.
தியாவுக்கு தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. திலன் என்பவரைத் திருமணம் செய்யப் போகிறார் தியா. கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் வெளிநாட்டில் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரன் கோகுலுடன் திரைப்பட முன்னணியினருக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். முதல் அழைப்பாக தனது நண்பரும், சக நடிகருமான ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.