லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலகி தீவிரமான அரசியல் பணியில் இறங்க இருக்கிறார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற தனது கட்சி பெயரையும் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் விஷாலும் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.
இதன் முதல் கட்டமாக தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார். வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.
விஷால் இதற்கு முன்பு கட்சி தொடங்காமலேயே அரசியலில் குதித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது தீவிரமாக இறங்கி இருக்கிறார். பார்லிமென்ட் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார். விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், சட்டசபை தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு எதிராக விஷாலை ஒரு முன்னணி கட்சி பின்னால் இருந்து இயக்குவதாகவும் கூறப்படுகிறது.