மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள்.
கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை.
நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். “அதிர்ச்சியாக இருந்தது. இதயம் உடைந்த தகவலைக் கேட்டபின் இளையராஜா அவர்களை சந்தித்து அவரது மகள் பவதாரிணி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தாருக்கு கடவுள் சக்தியைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.