காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தனுஷ் நடிப்பில் ‛கேப்டன் மில்லர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, நாகார்ஜூனா ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி பகுதியில் நடக்கிறது. அந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே அறிவிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் செல்லும் பாதையில் இப்படி படப்பிடிப்பு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.