ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் என்கிற இரட்டையர்கள் காமெடி மிகப்பெரிய அளவில் எண்பது 90களில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அதன்பிறகு அப்படி ஒரு இரட்டையர் கூட்டணியை அடுத்து வந்த நகைச்சுவை நடிகர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அதே சமயம் கதாநாயகனாக நடித்து வந்த பார்த்திபனும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் பாரதி கண்ணம்மா படத்தில் முதன் முதலாக இணைந்து அதேபோன்ற ஒரு இரட்டையர் காமெடி கூட்டணியை உருவாக்கினர்.
பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள் தான் இவர்களது காமெடியின் அடிநாதம். இதைத்தொடர்ந்து வந்த வெற்றி கொடி கட்டு, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் ஒரு காலகட்டத்தில் வடிவேலு சோலோ காமெடியனாகவும் கதாநாயகனாகவும் வளர்ந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மீண்டும் தங்களது கூட்டணி இணைவதற்கான வாய்ப்பு விரைவில் இருக்கலாம் என்று சூசகமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், அங்கே வடிவேலுவுடன் இணைந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,"நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்! இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்.." என்று கூறியுள்ளார்.