ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தவிர முன்னணியில் இருக்கும் ஐந்து இசையமைப்பளர்களில் ஹாரிஸ் ஜெயராஜும் ஒருவர்.. பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர். கமல், அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற இவர் ஷங்கர் இயக்கிய அந்நியன், நண்பன் ஆகிய படங்களுக்கும் அவருடன் இசை கூட்டணி அமைத்தார். குறிப்பாக கவுதம் மேனன், மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் ஆகியோரின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்த ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்களுக்கு இசையமைத்து பார்க்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் பிசியாக ஓடிக்கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் ஐந்து ஆறு படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மீடியாக்களுடன் உரையாடிய ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதும் ரசிகர்களுடன் உரையாடுவதில் விருப்பம் உள்ளவன் என்றும் ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது சோசியல் மீடியா கணக்கு யாரோ சிலரால் கேக் செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்,