Advertisement

சிறப்புச்செய்திகள்

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிதம் பேசிய மகத்தான தலைவன் : ‛கேப்டன்' விஜயகாந்த் வாழ்க்கை பயணம்

28 டிச, 2023 - 09:38 IST
எழுத்தின் அளவு:
Captain-Vijayakanth-life-journey

சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த “கேப்டன்” விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தேமுதிக., தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயராஜ் ‛கேப்டன் விஜயகாந்த்'-ஆக மாறிய அவரது வாழ்க்கை பயணத்தை சற்றே திரும்பி பார்ப்போம்...

விஜயகாந்த் பயோடேட்டா

நிஜப்பெயர் : விஜயராஜ்
சினிமா பெயர் : விஜயகாந்த்
பிறப்பு : 25-ஆகஸ்ட்-1952
பிறந்த இடம் : திருமங்கலம் - மதுரை
மனைவி : பிரேமலதா
பிள்ளைகள் : விஜய் பிரபாகரன் - சண்முக பாண்டியன்
பெற்றோர் : அழகர்சாமி நாயுடு - ஆண்டாள்
புனைப்பெயர் : கேப்டன் - புரட்சி கலைஞர்



விஜயகாந்த் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தி பிரிட்டோ உயர்நிலை பள்ளியிலும், மதுரையில் உள்ள நாடார் உயர்நிலை பள்ளியிலும் பயின்றார். பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த் அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

முதல் வாய்ப்பு
படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த
இவருக்கு 1978ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது திரைப்பயணத்தை துவக்கினார்.



திருப்பம் தந்த ‛சட்டம் ஒரு இருட்டறை'
அதன்பின் 1980ல் வெளிவந்த 'தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார். 1981ல் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.



அடுத்தடுத்து வளர்ச்சி
இதன் பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த். தன்னால் குணசித்திர வேடமேற்று நடித்தும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த 'வைதேகி காத்திருந்தாள்' என்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இதனைத் தொடர்ந்து 'அம்மன் கோயில் கிழக்காலே' 'தழுவாத கைகள்' 'ஊமை விழிகள்' என்று பேர் சொல்லும்படி இவருடைய படப்பட்டியல் நீண்டது.



கேப்டன்-ஆக மாற்றம்
1991ல் இயக்குநர் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. இத்திரைப்படம் விஜயகாந்திற்கு 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பின்னர் தான் இவரை இவருடைய ரசிகர்களும் இவருடைய கட்சித் தொண்டர்களும் அன்போடும் மரியாதையோடும் 'கேப்டன்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அரசியல் பயணம்
சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.



2006ல் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது. இவர் சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 13000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



எதிர்க்கட்சி
பின்னர் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. அதற்கு பின்பு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.



விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வந்த சில முக்கிய படங்கள்

1. சட்டம் ஒரு இருட்டறை
2. சிவப்பு மல்லி
3. நெஞ்சிலே துணிவிருந்தால்
4. பார்வையின் மறுபக்கம்
5. சாட்சி
6. வெற்றி
7. நூறாவது நாள்
8. நாளை உனது நாள்
9. வைதேகி காத்திருந்தாள்
10. ஈட்டி
11. நீதியின் மறுபக்கம்
12. நானே ராஜா நானே மந்திரி
13. கரிமேடு கருவாயன்
14. அம்மன் கோவில் கிழக்காலே
15. வசந்த ராகம்



16. ஊமை விழிகள்
17. தழுவாத கைகள்
18. தர்ம தேவதை
19. சிறைப்பறவை
20. கூலிக்காரன்
21. நினைவே ஒரு சங்கீதம்
22. உழவன் மகன்
23. சட்டம் ஒரு விளையாட்டு
24. தெற்கத்தி கள்ளன்
25. பூந்தோட்டக் காவல்காரன்
26. நல்லவன்
27. செந்தூரப் பூவே
28. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
29. பாட்டுக்கு ஒரு தலைவன்
30. பொன்மனச் செல்வன்



31. ராஜநடை
32. புலண் விசாரணை
33. புதுப்பாடகன்
34. சந்தன காற்று
35. சிறையில் பூத்த சின்ன மலர்
36. எங்கிட்ட மோதாதே
37. சத்ரியன்
38. கேப்டன் பிரபாகரன்
39. மாநகரக் காவல்
40. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
41. சின்ன கவுண்டர்
42. பரதன்
43. கோயில் காளை
44. ஏழை ஜாதி
45. சக்கரைத் தேவன்
46. ராஜதுரை
47. எங்க முதலாளி
48. செந்தூரப்பாண்டி
49. சேதுபதி ஐபிஎஸ்
50. ஆனஸ்ட் ராஜ்



51. என் ஆசை மச்சான்
52. பெரிய மருது
53. கருப்பு நிலா
54. திரு மூர்த்தி
55. காந்தி பிறந்த மண்
56. தமிழ் செல்வன்
57. அலெக்ஸாண்டர்
58. தர்ம சக்கரம்
59. உளவுத்துறை
60. தர்மா
61. வீரம் வெளஞ்ச மண்ணு
62. கள்ளழகர்
63. பெரியண்ணா



64. கண்ணுபட போகுதய்யா
65. வானத்தைப்போல
66. வல்லரசு
67. வாஞ்சிநாதன்
68. நரசிம்மா
69. தவசி
70. ராஜ்ஜியம்
71. ரமணா
72. சொக்க தங்கம்
73. தென்னவன்
74. எங்கள் அண்ணா
75. கஜேந்திரா
76. நெறஞ்ச மனரு
77. பேரரசு
78. சுதேசி
79. தர்மபுரி
80. சபரி
81. அரசாங்கம்
82. மரியாதை
83. எங்கள் ஆசான்
84. விருதகிரி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் விஜயகாந்த் காலமானார்நடிகர் விஜயகாந்த் காலமானார் கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் காவல்காரன்” விஜயகாந்த் கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)