சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சென்னை : நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்(71) உடல்நலக் குறைவால் இன்று(டிச., 28) காலமானார். இருதினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் கேப்டன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேமுதிக., கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பொதுவெளியில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
மூச்சு திணறல் காரணமாக, இம்மாதம் துவக்கத்தில் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட உள்ளது.